“Forty-one years ago today, violent attacks targeting Tamil civilians and businesses started in Colombo, Sri Lanka. Thousands of innocent lives were lost, and many more Tamils were injured, subjected to sexual violence, and forced to flee the country. The anti-Tamil pogrom, known as Black July, escalated tensions in what became a decades-long armed conflict. It remains one of the darkest chapters in Sri Lanka’s history.
“In 2022, the Parliament of Canada unanimously adopted a motion to make May 18 Tamil Genocide Remembrance Day – a recognition of Canada’s commitment to stand in solidarity with Tamil-Canadians and Tamil communities around the world in remembering and honouring the victims and survivors of these senseless acts of violence. As a steadfast defender of human rights, the Government of Canada will continue to demand accountability for human rights violations and abuses against vulnerable communities in Sri Lanka.
“In the aftermath of Black July, Canada established a Special Measures program to help 1,800 Tamils relocate to safety in Canada and build new lives for themselves and their families. Canada now has one of the largest Tamil diasporas in the world, and we celebrate the contributions Tamil-Canadians make to our country every single day – and we will always protect them.
“On this day, I join Canadians in expressing my deepest condolences to all who have suffered and lost loved ones during Black July. Together, let us honour the victims of this tragedy and recommit to building a more inclusive and peaceful future, free of hate and violence, for people everywhere.”
தமிழ்க் கனேடியர்கள் தினமும் எமது நாட்டுக்குப் புரியும் பங்களிப்பு காரணமாக அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு எமது அரசாங்கத்திற்கு உண்டு
கனடிய பிரதமர் ட்ரூடோ, இலங்கையில் கறுப்பு ஜூலையின் 41 ஆவது ஆண்டை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை
“நாற்பத்தொரு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இலங்கையின் கொழும்பில் தமிழர்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஆயிரக்கணக்கான அப்பாவிகள் மரணமாகி, மேலும் பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்து, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, நாட்டை விட்டுத் தப்பியோடப் பலவந்தப்படுத்தப்பட்டார்கள். கறுப்பு ஜூலை என அறியப்படும் தமிழர்களுக்கு எதிரான இந்த வன்முறை, பதட்டத்தை அதிகரித்து, தசாப்த காலங்கள் நீடித்த ஆயுதப் போராகியது. இலங்கை வரலாற்றின் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
“கனடிய நாடாளுமன்றம் மே 18 ஆந் திகதியைத் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை 2022 ஆம் ஆண்டில் ஒருமனதாக அங்கீகரித்தது. அர்த்தமற்ற இந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டோரையும், தப்பிப் பிழைத்தோரையும் நினைவுகூர்ந்து கௌரவிப்பதில் தமிழ்க் கனேடியர்களுடனும், உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகங்களுடனும் இணைந்திருப்பதில் கனடா கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்காக உறுதியாகக் குரல்கொடுக்கும் கனேடிய அரசு, இலங்கையில் நலிவநடைந்த சமூகத்தினருக்கு எதிராகப் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும், துஷ்பிரயோகத்திற்குமான இலங்கை அரசின் பொறுப்புக் கூறலைத் தொடர்ந்து வலியுறுத்தும்.
“கறுப்பு ஜூலையின் பின்னணியில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பாகக் கனடாவுக்குக் குடிபெயர்ந்து அவர்களும், அவர்களது குடும்பங்களும் கனடாவில் புதிய வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு உதவியாகக் கனடா சிறப்பு ஏற்பாடுகள் செயற்திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியது. உலகின் மிகப் பெரும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களில் ஒன்று தற்போது கனடாவில் உள்ளது. தமிழ்க் கனேடியர்கள் தினமும் எமது நாட்டுக்குப் புரியும் பங்களிப்பைக் கொண்டாடும் நாம் அவர்களை எப்போதும் பாதுகாக்கும் பொறுப்பு எமது அரசாங்கத்திற்கு உண்டு என்பதை நான் உணர்கின்றேன்.
“கறுப்பு ஜூலையில் துன்பத்தை அனுபவித்தும், அன்புக்குரியவர்களை இழந்தும் வாடும் அனைவருக்கும் கனேடியர்களுடன் இணைந்து எனது ஆழ்ந்த இரங்கலை இந்த நாளில் தெரிவிக்கிறேன். இந்த அவலத்தில் பாதிக்கப்பட்டோரை நினைவேந்தி, வெறுப்பும் வன்முறையும் அற்றதும், அனைவரையும் அதிகம் உள்வாங்கியதும், அமைதியானதுமான எதிர்பாலத்தை அனைவருக்குமாக கட்டியெழுப்புவதற்கான எமது உறுதிப்பாட்டை மீளவும் கனடியர்களான நாம் உறுதிப்படுத்துவோம்.”