தமிழின அழிப்பின் ஒரு கட்டமாக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின்போது 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்களின் வணிக நிறுவனங்கள், வீடுகள் ஆகியன அழித்தொழிக்கப்பட்டதன் 41ஆவது ஆண்டு நினைவு இவ்வாரமாகும்.
மாகாணத்தின் அமைச்சராக விளங்கும் விஜய் தணிகாசலம் அவர்கள் இதுபற்றி நினைவுகூரும்போது, “கொடூரமான இவ்வினப்படுகொலையால், தமிழர்கள் அளப்பரிய துன்பங்களைச் சுமந்து தமது தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்தனர். தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இக்கொடுமைகளை உலகிற்கு எடுத்துரைக்கவும், அவர்களின் பாதிப்புகள் என்றும் மறக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் 104 நிறைவேற்றப்பட்டது”, என தெரிவித்துள்ளார்.
தமிழ் இன அழிப்புக் குறித்து எதிர்காலத் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றவும் ஏதுவாக இச்சட்டம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.