காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் கிராமத்தில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். குமரவேல் என்பவரின் வீட்டுமனை பட்டாவை பதிவேற்றம் செய்ய கருணாகரன் ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். சாலவாக்கம் சாலை அருங்குன்றத்தில் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கருணாகரன் கைது செய்யப்பட்டார்.
