பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்த சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தேனி மாவட்டத்தில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை கோவை ஜெ.எம்.4 நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சவுக்கு சங்கர் தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனதை விசாரித்த நீதிபதி சரவணபாபு சாதாரண நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.