பு.கஜிந்தன்
காவேரிக் கலாமன்றம் நடத்திய நண்டு தொழில் இலக்கிய பண்பாட்டு கூடலானது இன்றையதினம் வேலணை செட்டிப்புலத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆய்வு உரைகள் இடம்பெற்றன. அந்தவகையில் நண்டு தொழில் முறைப்பார்வை என்ற தலைப்பின் கீழ் அ.இன்பராசா அவர்களும், நண்டும் ஊட்டச்சத்தும் என்ற தலைப்பின் கீழ் திருமதி டெபோரா அவர்களும், நண்டு சந்தைப்படுத்தலும் வியாபார முகாமைப்படுத்தலும் என்ற தலைப்பின் கீழ் பெசில் பெனட் அவர்களும் ஆய்வுரைகளை ஆற்றினர்.
நண்டு தொழில் இலக்கிய பண்பாட்டு கூடலின் தலைவர் ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்களாக காவேரிக் கலாமன்றத்தின் நிறைவேற்று இயக்குனர் ரெபரன்ட் ஈ.எஸ்.யோசுவா, சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திரு.கருணாகரன், கிராம உத்தியோகத்தர் திரு.கோகிலரூபன், கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திரு.மார்க்கண்டுதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், சமூக மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்விற்கு இணை அனுசரணையினை தமிழியல் ஆய்வு நடுவகம், செட்டிப்புலம் வேலணை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், ஐயனார் ஆலய பரிபாலனசபை, ஐயனார் விளையாட்டு கழகம், சனசமூக நிலையம், இளைஞர் கழகம் ஆகிய அமைப்புக்கள் வழங்கின.