கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன் விழாவை முன்னிட்டு பாடசாலை சமுகத்தால் ஆரோக்கியத்தை பேணுவோம் என்ற தொனிப்பொருளில் நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
26-07-2024 வெள்ளிக்கிழமை காலை பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம் திருவையாறு பகுதியை வலம் வந்து பாடசாலையில் நிறைவடைந்தது .
குறித்த நடைபயணத்தில் பாடசாலை பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.