ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல்துறை கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 5வழக்கறிஞர்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் சம்பவ செந்திலுடன் தொடர்பிலிருந்து பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஹரிஹரன் என்பவரை ஐந்து நாள் காவல்துறை காவலில் எடுத்து தனிப்படை காவல்துறை விசாரணை செய்து வந்தனர். இதனிடையே, நேற்று விசாரணை முடிவடைந்த நிலையில் எழும்பூர் ஐந்தாவது நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி மீண்டும் அவரை பூந்தமல்லி தனி சிறையில் அடைத்தனர். அவரிடம் தனிப்படை காவல்துறை விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் சில வழக்கறிஞர்களின் வங்கி கணக்கு மற்றும் செல்போன் உரையாடல்களை காவல்துறை ஆய்வு செய்து வருகின்றனர்.
