போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் சையது இப்ராஹிம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த வாரம் ரூ.70 கோடி மதிப்புள்ள 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் சையது இப்ராஹிம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது; “இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்ராஹிம் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது