தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு நாகலாந்து ஆளுநராக இருந்தார். இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் ஆளுநர் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் ஆளுநர் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல் திமுகவின் கொள்கைகளையும் விமர்சிக்க தொடங்கினார். சில தினங்களுக்கு முன்பு தான், புதுச்சேரி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நிமயிக்கப்பட்டனர். மகாராஷ்டிராவின் ஆளுநராக சி.பி.ராதாகிஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் ரவியே தமிழக ஆளுநராக தொடர்வார் எனக் கூறப்படுகிறது.