பு.கஜிந்தன்
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இருவர் படுகாயம்!
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் ஏ-9வீ தியில் யாழ். நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயும் மகளும் இத்தாவில் பாடசாலை ஒன்றிற்கு திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அங்கிருந்த இளைஞர்களால் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.ஆங்கில தின போட்டி ஒன்றிற்காக தனது மகளை பாடசாலைக்கு ஏற்றி சென்ற வேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.