பு.கஜிந்தன்
நான்கு முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு விழா!
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தினேஸ் முன்பள்ளி, வளர்பிறை முன்பள்ளி , உதயதாரகை முன்பள்ளி மற்றும் அறத்தி நகர் முன்பள்ளி என நான்கு முன்பள்ளிகள் இணைந்து செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா (30/07/2024) கச்சார்வெளி செல்வபுரம் தினேஸ் முன்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வானது பிற்பகல் 2.30மணியளவில் விருந்தினர்கள் மாலை அனுவத்து அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றி தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆரம்ப முன்பருவ அபிவிருத்தி பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் பொ.விஐயநாதன், சிறப்பு விருந்தினர்களாக உப அதிபர்,கிராம அலுவலகர்கள் மற்றும் முன்பள்ளி பிரதேச இணைப்பாளர் ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக பளை பிரதேச முன்பள்ளி இணைப்பாளர், ஏழ்மைக்கை கைகொடுக்கும் உறவுகள் இணைப்பாளர் , நலன் விரும்பிகள் பெற்றோர்கள் மாணவ செல்வங்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.