நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் தன் 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலுக்கு வருவதையும் அறிவித்துள்ளார். சினிமாவில் தனக்கென பெரிய புகழும், வணிகமும் இருக்கும்போதே இம்முடிவை அவர் எடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியமளித்துள்ளது. அரசியலுக்கு வந்தபின் அவர் குறித்த செய்திகளும் தகவல்களும் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகப் தகவல் வெளியாகியுள்ளது. 2012-ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு 132% வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் இந்த வரியைச் செலுத்தாமல் வாகனத்தைப் பயன்படுத்தி வந்தார்.
இதனையறிந்த நீதிமன்றம் வரியை அளிக்க உத்தரவிட்டதுடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து, பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் தன் காரைக் கொண்டு வந்து படக்குழுவினரை வைத்து ஓட்டினார். அந்த காணொளி வெளியாகி வைரலானது. தற்போது, எம்பயர் ஆட்டோ என்கிற கார்களை விற்கும் நிறுவனம் மூலம் இந்தக் கார் ரூ.2.5 கோடி ஆரம்ப விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.