கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் சூரல் மலையில் சிக்கிய அரசுப் பேருந்து 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது. சூரல் மலை முதல் கல்பட்ட பகுதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் தினசரி பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சூரல் மலையில் நிலச்சரிவுக்கு முன்னதாக பேருந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு, நிலச்சரிவு ஏற்பட்டதால் பேருந்து இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், 6 நாட்களுக்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டுள்ளது.