மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். அவருக்கு வயது 80.
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் காலமானார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த இடது முன்னணி ஆட்சியின் போது, புத்ததேவ் பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி முதலமைச்சராக இருந்தார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார்.
மேலும், 2016-க்கு பிறகு உடல் நலக்குறைவு காரணமாக அவர் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது கூட அவரின் பேச்சு வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு, கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலின்போது புத்ததேவ் பட்டாச்சார்யா, கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்பது போல ஏ1 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காணொளி ஒன்றை கட்சி வெளியிட்டிருந்தது. இத்தகைய சூழலில், கடந்த பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா காலை தனது வீட்டில் உயிரிழந்தார்.