எதிர்வரும் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடாவில் நடைபெறவுள்ள ‘வென்மேரி’ சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் பெறும் வெற்றியாளர்கள் கனடா வந்தடைந்தனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் முக்கியமானவர் ‘வென்மேரி’ சர்வதேச விருதுகள்’ தெரிவுக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தடைந்தார்.
அத்துடன் பல சர்வதேச ஓட்டப்போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகள் பல பெற்ற ஓட்ட வீராங்கனை திருமதி அகிலத்திருநாயகி ஶ்ரீசயனந்தபவன் முல்லைத்தீவிலிருந்து கனடா வந்தடைந்தார்.
அத்துடன் பிரபல பெண் திரைப்பட இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களும் ஜேர்மனியிலிருந்து கனடா வ ந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் இவர்களை வரவேற்கச் சென்றிருந்த குழுவில் ‘வென்மேரி’ சர்வதேச விருதுகள் விழாவின் நிறுவனர், கனடா வாழ் அனுரா மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கடந்த வருடம் பிரான்ஸ் தேசத்தில் இடம்பெற்ற ‘வென்மேரி’ விருதுகள்’ விழாவில் பத்திரிகைத்துறை சார்ந்த சாதனைக்கான விருது பெற்றவருமான லோகேந்திரலிங்கம் மற்றும் திருவாளர்கள் விசு கணபதிப்பிள்ளை, ஜஸ்டின் போல், திலிசன் ஆகியோர் உட்பட பலர் நிற்பதையும் காணலாம்.
-சத்தியன்