தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் பதாகைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அர்ஜுனின் பதாகை வெளியானது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் புதிய பதாகை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரவ்வின் பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பதாகை வைரலாகி வருகிறது.
