கடந்த 04-08-2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஜெனிசா அரிஸ்ரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாகவும் அழகுறவும் நடைபெற்றது என்றால் அது மிகையாகாது.
‘கலைமன்றம் நுண்கலைக் கல்லூரியின் அதிபர் நிரஞ்சனா சந்துரு அவர்களின் வழிகாட்டலில் தனது பரதநாட்டிய பயிற்சியைப் பெற்று அன்றைய தினம் மேடையில் தான் பயின்றவற்றை கச்சிதமாகவும் அழகுறவும் மேடையில் செல்வி ஜெனிசா அரிஸ்ரன் அவர்கள் சமர்ப்பணம் செய்தார் என்பதை அரங்கேற்றத்தின் இறுதியில் உரையாற்றிய பிரதம விருந்தினர் பேராசிரியர் சந்திரகாந்தன் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அரங்கேற்ற நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் ராகவன் பரஞ்சோதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
திரு.திருமதி அரிஸ்ரன் தம்பதியின் புதல்வியான நடனச் செல்வி ஜெனிசா அரிஸ்ரன் அன்றைய தினம் பக்கவாத்தியக் கலைஞர்களினதும் நட்டுவாங்கம் செய்த இளம் இசைக் கலைஞர்கள் ஐஸ்வர்யா சந்துரு மற்றும் ஆகாஸ் கதிர்காமன் ஆகியோரின் நடன நெறியாழ்கையிலும் அனைத்து உருப்படிகளையும் அழகிய முறையிலும் நேர்த்தியாகவும் சமர்ப்பணம் செய்தமை சபையோரைக் கவர்ந்தது என்பதை அவர்கள் அடிக்கடி கரகோசம் செய்தமை காட்டி நின்றது.
பல இசை நடன ஆசிரியைகள் அங்கு கலந்து சிறப்பித்தார்கள். ஏனைய பக்கவாத்தியக் கலைஞர்களாக, ரதிரூபன் பரஞ்சோதி (மிருதங்கம்). ஜெயதேவன் நாயர் (வயலின்) மற்றும் விஸ்ணு (புல்லாங்குழல்) ஆகியோரினதும் பக்கவாத்திய இசையின் மேன்மையும் செல்வி ஜெனிசா அரிஸ்ரன் அவர்களின் நடனங்களை அழகின் எல்லைக்கு அழைத்துச் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.
அரங்கேற்றத்தின் இறுதியில் மேடைக்கு ஆவலுடன் ”படையெடுத்த’ சபையோரும் உறவினர்களும் செல்வி ஜெனிசா அரிஸ்ரன் அவர்களை பாராடடியும் பரிசளித்தும் விடைபெற்றனர். -சத்தியன்
புகழ்பெற்ற நடனக் கலைஞர் மதுரை முரளிதரன் அவர்கள் கனடாவில் ‘நிரோ டான்ஸ் கிரியேசன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் முழு நீள நாட்டிய நாடகம்.
சிவனின் தசஅவதாரங்கள் பற்றிய கலைத்துவமான மேடை நிகழ்வு இது.
17-08-2024 சனிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஆர்மேனியன் அரங்கில் நடைபெறுகின்றது.