சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் கடந்த மாதம் வெளியாகியது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. படத்தின் முன்னோட்டம் குறித்து தற்பொழுது பதிவேற்றம் வெளியாகியுள்ளது. படத்தின் முன்னோட்டம்ர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக பதாகை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
