தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தி கோட் (தி கிடேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தி கோட் படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே விஜய் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து தமிழ வெற்றிக் கழகம் என்று தனது கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஜய்யின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பாரா என்பது தெளிவற்ற விஷயமாகவே இருக்கிறது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 69 படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முந்தைய நேர்காணல்களில் பேசும் போது, விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அது அரசியல் சார்ந்த கதையாகவே இருக்கும் என்று இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்து இருந்தார்.
அதன்படி தளபதி 69 படம் அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஹெச். வினோத், நடிகர் விஜய் இணையும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசியல் அறிவிப்பு வெளியான நிலையிலும், நடிகர் விஜய் தி கோட் படத்தைத் தொடர்ந்து தளபதி 69 மற்றும் தளபதி 70 என இரண்டு படங்களில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயம் என்றே கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களில் தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படும் நிலையில், தளபதி 70 படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.