பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘தங்கலான்’ திரைப்படத்தின் 3வது பாடலான ‘அறுவடை’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் பலரும் தங்கலான் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கங்குவா படத்தில் வெளியீட்டில் படு மும்மரமாக உள்ள நடிகர் சூர்யா தங்கலான் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது..“தங்கலானின் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும். சீயான் விக்ரம், பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
