ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா உணவகம் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா உணவகங்கள் திறக்கப்பட்டது. காலை, மதியம், இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு தரம் சுவையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா உணவகங்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.
