லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர். மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும். ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் முன்னோட்டத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பதிவேற்றம் இன்னைக்கு வந்துவிடும் என இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கோட் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு தேதி குறித்த பதிவேற்றத்தை வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி அளித்துள்ளார்.
