‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை தவிர்த்து மேலும் ஒரு படத்துடன் திரையுலகிலிருந்து வெளியேறி, முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 69-வது படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் ‘விடுதலை பாகம் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் அண்மையில் சூர்யா படத்தை இயக்குவதாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் விஜயின் 69 படத்தை இயக்குவதை இயக்குனர் ஹெச்.வினோத் உறுதி செய்தார்.