தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ வடிவமைத்துள்ள இஎஸ்ஓ 08 என்ற செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை சுமந்தபடி எஸ்எஸ்எல்வி டி-3 என்ற ராக்கெட் சற்று முன்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது. இந்நிலையில் ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: ”இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது அந்த செயற்கைக்கோள் அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளன. தொடர்ந்து செயற்கைக்கோளின் செய்லபாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படும். இதற்கான உழைப்பைச் செலுத்திய எஸ்எஸ்எல்வி டி-3 குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும். குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி இந்த அம்சங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டது. கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும்” இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத தெரிவித்துள்ளார்.