(கனகராசா சரவணன்;)
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி புதூர்ல் தமது காணியை ஜே.வி.சி இயந்திரம் மூலம் துப்பரவு செய்ய சென்றவர்கள்; பொதுமக்களின் காணியை அபகரிக்க முற்பட்டதாக அந்தபகுதி மக்கள் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டபோது ஏற்பட்ட சர்ச்யையையடுத்து ஜே.வி.சி இயந்திரம் மீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலையடுத்து பெற்றோலிய கூட்டு;த்தாபனத்தின் தலைவர் தனது கைதுப்பாக்கியால் ஆகாயத்தை நோபக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட சம்பம் சனிக்கிழமை 17ம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது
குறித்த கடல் பிரதேசத்தை அண்டிய லண்டணில் வசித்துவரும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான 11 ஏக்கர் காணியை கடந்த காலத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காணியை துப்பரவு செய்து கேம்பி வேலி அடைக்கும் நடவடிக்கைக்காக சம்பவதினமான இன்று ஜே.வி.சி இயந்திரத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைர் சென்று துப்பரவு பணியை ஆரம்பித்த நிலையில் அங்கு ஒன்று கூடிய மக்கள் தமது காணியை அபகரிப்பதாகவும் உங்கள் காணியின் எல்லையை தாண்டி நீங்கள் அபகிப்பதாகவும் உங்களுடைய காணியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு கடல் அரிப்பினால் கடலுக்குள் சென்று விட்டது.
எனவே தற்போது கடல் இருக்கும் இடத்தில் இருந்து உங்கள் காணி பின் நோக்கி இருப்பதாக நினைத்து காணி எல்லையைதாண்டி உமது காணிகளை அபகரிப்பதாக தெரிவித்தனர் இதன் போது இரு சாராருக்கும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் ஜே.வி.சி இயந்திரத்தின் மீது கல்வீச்சு தாக்குதலையடுத்து அதன் கண்ணாடிகள் உடைந்ததையடுத்து பெற்றோலிய கூட்டு;த்தாபனத்தின் தலைவர் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தினார்
இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து விசேட அதிரடிப்படையினர் பொலிசார் சென்று நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் அவரையும் ஜே.வி.சி இயந்திரத்தையும் பாதுபாப்பாக அங்கிருந்து வெளியேற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றளர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.