கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சார்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். அதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெறவுள்ளது. கலைஞரின் கனவுகளை நனவாக நாம் தொடர்ந்து ஒன்றிணைவோம். கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறியது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.