‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வேட்டையன் திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் அக்.10-ந்தேதி வெளியீடு ஆவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வேட்டையன் படம் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அக்.11-ந்தேதி ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வேட்டையன் படம் அக்.10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
