மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நெகிழ்ச்சி பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து டில்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்ற அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினரும் ராஜீவ் காந்தியின் உருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சி பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “அப்பா, நீங்கள் கற்பித்தவையே எனக்கு உத்வேகமளிக்கிறது. இந்தியாவுக்கான உங்களது கனவு என்னுடைய கனவுகளும் கூட, நான் அவற்றை நிறைவேற்றுவேன்” எனப் பதிவிட்டுள்ளார்.