தமிழ்நாட்டின் உயரக சைவ உணவகத்தின் நான்காவது கனடியக் கிளை பிரம்ரன் மாநகரில் திறந்து வைக்கப்பெற்றது
மாநகரபிதா பெற்றிக் பிறவுண் உட்பட பல மக்கள் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்
தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட உயர் ரக சைவ உணவகமான ‘சரவணா பவன்’ தனது நான்காவது கனடியக் கிளையை கனடாவின் பிரம்ரன் மாநகரில் கடந்த 17ம் திகதி சனிக்கிழமையன்று திறந்து வைத்தது.
மேற்படி பிரம்ரன் மாநகரபிதா பெற்றிக் பிறவுண் உட்பட பல மக்கள் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர். அவர்கள் அனைவரையும் கனடியக் கிளைகளின் உரிமையாளர் கணேசன் சுகுமார அவர்கள் தனது புதல்வி மற்றும் பணியாளர்கள் சகிதம் வரவேற்று திறப்பு விழா சிறப்பாக நடத்தினார்.
மேற்படி திறப்பு விழாவிற்கு அழைக்கப்பெற்ற விருந்தினர்களாகவும்
சிறப்புஅழைப்பாளர்களாகவும் வருகை தந்த அனைவரையும் அவர்கள் வரவேற்று உபசரித்து அன்பளிப்புக்களையும் வழங்கி மகிழ்வித்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் என பத்துக்கும் மேற்படி மக்கள் பிரதிநிதிகளும் நண்பர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் அத்துடன் ஊடக நண்பர்கள் வர்த்தகப் பிரமுகர்கள் என பலர் அங்கு சமூகமளித்திருந்தனர்.
இதற்கு முன்னர் ஒன்றாரியோ மாகாணத்தில் ஸ்காபுறோ மற்றும் பிரம்ரன் மாநகரங்களிலும் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சுரே நகரிலும் கிளைகளைக் கொண்டியங்கிய தமிழ்நாட்டின் உயர் ரக சைவ உணவகமான ‘சரவணா பவன்’ தனது நான்காவது கனடியக் கிளையை கனடாவின் பிரம்ரன் மாநகரில் ஆயிரக்கணக்கான உணவு சுவைஞர்களின் வேண்டுகோளிற்கு ஏற்ப கடந்த 17ம் திகதி சனிக்கிழமையன்று திறந்து வைக்கப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Unit #50- 295A Queen Street East, Brampton, Ontario, L6W 3R என்னும் விலாசத்தில் அமைந்துள்ள இந்த பிரம்ரன் கிளையின் தொலைபேசி இலக்கம் 905 457 7575 ஆகும்.
இங்கே காணப்படும் படங்கள் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டவையாகும்
Kaneshaanathan-Local Journalism Reporter-1