துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகும் இத்திரைப்படம் செப்.7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தீபாவளிக்கு (அக்.31) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தரத்தை மேம்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.