பு.கஜிந்தன்
இன்று 21ம் திகதி காலை யாழ்ப்பாணத்தில் அசாதாரண காலநிலை நிலவியது. ஆகையால் சில இடங்களில் காற்றும், சில இடங்களில் மழையுடன் கூடிய காற்றும் வீசியது.
இதனால் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த தொடர் மாடி குடியிருப்பின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்தது.