நடராசா லோகதயாளன்
சீன அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்று வியாழக்கிழமை(2024-08-22) மன்னாரில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தில் பொருத்தும் பணி தொடங்கியது
சீன அரசினால் வடக்கு கிழக்கு மீனவர்களிற்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் வடக்கு கிழக்கில் உள்ள 7 கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களங்களின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்தில் ஒரு வீடு வியாழன்று இலங்கை கடற்படையினர் மூலம் பொருத்தும் பணி அரம்பமாகியது.
தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மன்னார் மாவட்டத்திற்கு நேரில் வருகை தந்துள்ள நாளில் இந்த வீடு பொருத்தப்படுகின்றது.
சின அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 500 வீடுகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116 வீடுகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய 6 கடற்றொழில் மாவட்டங்களிற்கும் தலா 64 வீடுகள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.