தமிழ் சினிமாவில் வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம்தான் கங்குவா. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டுள்ள இந்தபடம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 10-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் “கங்குவா” படத்தின் முழு வெளிநாட்டு உரிமைகளையும் பாரீஸ் பிலிம் நிறுவனம் 40 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் வெளிநாட்டு திரையரங்கு உரிமைகளுக்காக இந்திய படத்திற்கு இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். ஒரு மல்டிஸ்டாரர் பெரிய பட்ஜெட் இந்தி படம் கூட இதற்கு முன் இந்த விலைக்கு விற்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சூர்யாவின் கெரியரிலேயே அதிக தொகைக்கு விற்பனையான படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.
