பிரபல பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சர்போதார். இவர் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தி படம் “முஞ்யா”. இதில், ஷர்வரி வாக், அபய் வர்மா, மோனா சிங் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சத்யராஜ் முன்னதாக இந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராதேஷ்யாம் படங்களில் நடித்திருந்தார். தற்போது நடித்துள்ள “முஞ்யா” இவருக்கு 3-வது இந்தி படமாகும். ஹாரர் நகைச்சுவை படமாக உருவான “முஞ்யா” வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, இப்படம் எப்போது ஓ.டி.டியில் வெளியீடு ஆகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டியில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
