பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் 23 பேரை சுட்டுக்கொன்று பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முசாகெல் மாவட்டத்தில் பேருந்து, டிரக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்த பயணிகளை இறக்கிவிட்ட பயங்கரவாதிகள், அவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 23-பேர் பலியாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. இந்த கொடூர சம்பவத்துக்கு பலுசிஸ்தான் மாகாண முதல் அமைச்சர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
