பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் கைபர் மாவட்டம் திரஹா பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கூடுதல் படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
