தேசிய மக்கள் சக்தியின் யாழ். திருநெல்வேலி தேர்தல் அலுவலக திறப்பு விழா 25-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நடைபெற்றது. பலாலி வீதி, திருநெல்வேலி சந்தியில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், மத தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.