‘கோட்’ படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் ‘கோட்’ படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவிருப்பதால், தற்போது புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்போது ‘கோட்’ படம் குறித்து பதிவேற்றம் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் 5 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘கோட்’ திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளநிலையில் அண்மையில் இப்படத்தின் தணிக்கை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அதன்படி ‘கோட்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டது. தற்போது ‘கோட்’ படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ‘கோட்’ படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என்றும், 7 இடங்களில் படத்திற்கு சென்சாரில் கட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் தீயாய் தகவல்கள் பரவி வருகின்றன.