தீயில் எரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 27-08-2024 ன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார். அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த துவாரகன் நிருத்திகா (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்ப பெண் கடந்த 25ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலே சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதெல்லாம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குறித்த பெண்ணுக்கு அவரது கணவனே தீ வைத்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் கணவன் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்நிலையில் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.