அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் முனா பாண்டே (வயது 21). நேபாள நாட்டை சேர்ந்த இவர் கல்லூரியில் படித்து வந்து இருக்கிறார். இந்நிலையில், அந்த மாணவி துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு குண்டு காயங்களால் குடியிருப்பில் கிடந்துள்ளார். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தபோது, மாணவி முனா உயிரிழந்து விட்டார். இதுபற்றி சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்தபோது, சம்பவ பகுதியில் இருந்து பாபி சின்ஹா ஷா (வயது 52) என்பவர் தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை போக்குவரத்து நிறுத்தத்தில் வைத்து காவல்துறை கைது செய்து உள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான காரணம், உள்நோக்கம் போன்றவை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. அதுபற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன்பின்னரே நேபாளத்தில் கல்லூரி மாணவி கொல்லப்பட்டதற்கான காரணம் தெரிய வரும்.