ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா, கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு வரும் 9-ம் தேதி நள்ளிரவு முதல் அக். 31-ம் தேதிவரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிமாவட்ட வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.