பப்புவா நியூ கினியாவின் பங்குனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பப்புவா நியூ கினியாவின் பங்குனாவில் இருந்து 57 கிமீ தெற்கே 41 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
