நான் ஆட்சியைப் பொறுப்பேற்றதும் முடிவுறுத்தப்படாமல் உள்ள அனைத்து வீட்டு திட்டங்களும் முழுமை பெறுவதுடன் ஒன்பது மாகாணங்களிலும் புதிய வீட்டுத் திட்டங்களை உருவாக்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.
31-08-2024 சனிக்கிழமை யாழ் ஊடகாமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
சஜித் பிரேமதாசா படம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் நீங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கிய போது ஆரம்பிக்கப்பட்ட பல ஆயிரம் வீட்டத்திட்டங்கள் நிறைவு பெறமல் இருக்கிறது இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை நான் ஆரம்பிக்கவில்லை எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாச காலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டவை.
எனது தந்தையார் ஒரு இலட்சம் வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தார் ஒரு இலட்சத்தி 28 ஆயிரம் வீடுகளை வழங்கினார்.
நான் வீட்டு திட்டங்களை வழங்கியது மக்களின் பங்களிப்பை பெற்றுக் கண்டு பகுதி பகுதியாக அவர்களுக்கான பணத்தினை வழங்குவதே திட்டம்.
ஆனால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வீடு திட்டங்களை நிறைவு செய்யாமல் மாறிவந்த கோட்டா அரசாங்கம் வீட்டுத திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தியது.
இந்தக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டமையால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல ஒன்பது மாகாணங்களிலும் உள்ள பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் நிறைவடையாமல் உள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களும் முழுமைப்படுத்தப்படுவதோடு புதிதாக ஒன்பது மாகாணங்களிலும் வீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்தார்