கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் ஒரு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு பள்ளியின் வாயிலில் பேருந்திற்காக மாணவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பேருந்து ஒன்று மாணவர்கள் மீது மோதியது. இதில் குறைந்தது 10 மாணவர்கள் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றி செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிக மாணவர்கள் ஏற்றப்பட்ட பள்ளி பேருந்து மற்றும் மோசமாக வடிவமைகப்பட்ட கட்டிடங்கள் உள்பட பள்ளி பாதுகாப்பு சீனாவில் நீண்ட காலமாக ஒரு பிரச்சினையாக உள்ளது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.