பு.கஜிந்தன்
, ஜனாதிபதி வேட்பாளர் அனுரா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள் சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம். ஆனால் அநுரவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. இதற்கு காரணம் சீன கொள்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் – விளைவிக்கும் என்றார் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமரவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் அனுரா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள் சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம்.
ஆனால் அவரால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெற முடியாது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும் ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள்.
அது மட்டும் அல்ல தேசிய மக்கள் கட்சியினர் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் நிலையில் அவர்களின் ஆட்சி வருவார்களானால் இலங்கை தீவின் பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படும்.