இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை கூடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினோஷ் போகத். அதன்பின் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியா வந்ததும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார். இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேரில் சந்தித்துள்ளனர். இதன்மூலம் அரியானா தேர்தலில் இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பபாரியாவிடம் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இன்று இந்த கேள்விக்கு தெளிவு கிடைத்தும் என பதில் அளித்திருந்தார். பபாரியா இவ்வாறு தெரிவித்த நிலையில் இன்றைய சந்திப்பு அதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.