சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எனது கணவரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்களாக பொலிசார் சித்திரவதை சொய்யப்பட்டதாக அவரது மனைவி ஊடகங்களுக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தனது கணவரை கடந்த புதன்கிழமை கைது செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படாமல் நள்ளிரவு நேரத்தில் சிவில் உடையில் வந்த சுன்னாகப் பொலிஸார் அடாவடித்தனமாக கைது செய்தனர்.
கைது செய்த பொலிசார் பொலிஸ் நிலையத்தில் எனது கணவரை சித்திரவதை செய்ததுடன் பிரசாந்த் என அழைக்கப்படும் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எனது கணவரை முழங்கால் இடைச் செய்து தாக்கியதாக எனது கணவர் என்னிடம் கூறினார்.
எனது கணவரை பொலிஸார் கைது செய்வதற்கான காரணங்கள் கூறாமல் கைது செய்ததுடன் கைது சொய்யப்பட்டு 24 மணித்தியாலங்களில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் பொலிஸ் காவலரனில் வைத்து சித்திரவதை செய்தனர்.
ஏன் எனது கணவரை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை எனக் கேட்கச் சென்ற என்னை நிறைமாத கர்ப்பிணி என தெரிந்தும் நீண்ட நேரம் காக்க வைத்ததோடு உண் கணவர் தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் சென்றால் தொடர்ந்தும் அவரை தடுத்து வைத்திருப்போம் எனவும் எச்சரித்தனர்.
எனது கணவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுகின்ற நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சுன்னாகப் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலரனில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஊடகங்களில் வெளி வந்தமை அனைவரும் அறிந்த விடையம்.
ஆகவே எனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய முறையில் விசாரணை இடம்பெற்று தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.