இந்தியா முழுவதும் ஓணம் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு பாலக்காட்டில் உணவு உண்ணும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சாப்பிடும் போது லாரி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி, உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாக மாறி மனிதனைக் கொன்றுவிடும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமொழி. இது புரியாமல் முட்டாள்தனமாக உணவு உண்ணும் போட்டிகள் நடத்தப்படுவதும், பணத்துக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு அதில் மக்கள் கலந்து கொள்கின்றனர். இது இந்தியாவில் மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது.
அதிக எண்ணிக்கையில் இட்லி, பரோட்டா, முட்டை, பிரியாணி இவைகளை குறைந்த நேரத்தில் அதிகம் சாப்பிடுவது என போட்டிகளை விதம் விதமாக நடத்தி வருகின்றனர். இப்படி நடத்தப்படும் போட்டிகளில் பரிசுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு கலந்துகொள்பவர்கள் அதிகம். பணத்திற்காக ஆசைப்பட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அப்பாவிகளே அதிகம். பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் கொல்லப்புரா இளைஞர்கள் குழு சாப்பாடு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. அதிகமான இட்லி சாப்பிடுவோருக்கு பரிசு வழங்கப்படும் என போட்டியை நடத்தும் குழுவினர் அறிவித்திருந்தனர். கிடைக்கப்போகும் பரிசுக்காக ஆசைப்பட்டு பாலக்காடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் அவசர அவசரமாக இட்லியை சாப்பிட்டார். இட்லிகள் அவரது தொண்டையில் சிக்கிவிட்டன. போராடியும் இட்லியை விழுங்க முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து சுள்ளிமடை வார்டு உறுப்பினர் மின்மினி சுரேஷ் ஒரே நேரத்தில் 3 இட்லிகளை ஒன்றாக விழுங்க முயன்றார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சுவிட முடியாமல் திணறினார். அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி அளிக்கப்பட்டு வாளையாறில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
சுரேஷ் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய போட்டிகளை நடத்துவோர் மீதும், அதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.