தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அதிமுக நடத்தக்கூடிய போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சிக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நாளை நடக்கவுள்ள இந்த அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று, விடுதலை சிறுத்தை கட்சிக்கு அதிமுக பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது. அதிமுகவின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், இன்று புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவமுகிலனை நேரில் சந்தித்து இந்த அழைப்பை விடுத்துள்ளார். அதிமுகவின் இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி பங்கேற்பது குறித்து, கட்சியின் மேல் இடத்தில் கேட்டு முடிவெடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு அதிமுக அழைப்பு விடுத்த விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.