கனடா வாழ் வர்த்தகத்துறை முன்னோடிகளும் சமூக நலன் விரும்பிகளுமான வர்த்தக வழிகாட்டிகளுமான திருவாளர்கள் கணேசன் சுகுமார்-குலா செல்லத்துரை ஆகியோரின் சேவையைப் பாராட்டி கனடிய அரசாங்கத்தின் சிபார்சின் பேரில் அவர்கள் இருவருக்கும் வழங்கப்பெற்ற உயர் கௌரவங்களை அண்மையில் நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் பெற்றுக் கொண்டார்கள்
மேற்படி உயர் கௌரவங்களை கனடா வாழ் 18 சேவையாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேன்மைதங்கிய இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டுப் பதக்கங்களே இந்த பதின்மருக்கு வழங்கப்பெற்றன.
.
இந்த பதக்கம் வழங்கப்பெற்றமை, மேற்படி இருவரும் ஆற்றிய சமூக சேவை மற்றும் தாராளசிந்தை மற்றும் அவை சார்ந்த பணித்திட்டங்கள் ஆகியவற்றிக்கானது என்பதும் இந்த கௌரவம் மக்கள் பணி ஆற்றும் அவர்களது உறுதிப்பாட்டையும் அங்கீகரிக்கிறது
என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
இந்த கௌரவம் தொடர்பாக திருவாளர்கள் கணேசன் சுகுமார்-குலா செல்லத்துரை ஆகியோர் வெளியிட்டுள்ள நன்றி தெரிவிக்கும் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
“நமது சமூகம், நாடு மற்றும் உலகத்தை எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த இடமாக மாற்ற இந்த அங்கீகாரம் உதவுகின்றது. . இந்த அங்கீகாரத்திற்காக அதன் தேர்வுக் குழுவிற்கும் கனடா அரசாங்கத்திற்கும் நாங்கள் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் பயணம் முழுவதும் எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாகவும் வலுவாகவும் இருக்கும் ஒவ்வொருவருக்கும்-எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்-அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம்.
எங்கள் வாழ்வின் முக்கியமான அங்கமாக விளங்கும் இந்த சாதனையை எங்களுடன் கொண்டாடியதற்கும் மீண்டும் ஒருமுறை நாம் இருவரும் நன்றி தெரிவிக்கின்றோம்”.
இவ்வாறு அந்த நன்றி தெரிவிக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
Ganesh- Local Journalism Initiative Reporter- 1